1. Home
  2. தமிழ்நாடு

இன்று எந்த பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால்...

1

ஒவ்வொரு மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியை சிவராத்திரி ஆக நாம் வழிபாடு செய்கிறோம் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மகா சிவராத்திரி ஆக நாம் கொண்டாடப்படுகிறோம் இந்த நாளில் சிவபெருமானை வணங்கும்போது நம்முடைய பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். இந்த மகா சிவராத்திரி வெள்ளிக்கிழமை வந்திருக்கிறது அன்றைய தினம் பிரதோஷமும் இருக்கிறது. சுக்கிர வார பிரதோஷமும் மகா சிவராத்திரியும் இணைந்து வந்திருக்கக் கூடிய இந்த அற்புதமான நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு காரியம் நம்முடைய பண கஷ்டங்கள் அனைத்தையும் நீங்கி ராஜபோக வாழ்க்கை வாழ வழிவகுக்கும்.

மகாசிவராத்திரி என்பது சிவபெருமானை வழிபட்டு, அவரின் அருளை முழுமையாக பெறுவதற்குரிய நாளாகும்.சிவனின் அருளை பெருவதற்கு, சிவனின் அன்பிற்குரியவர்களாக மாறுவதற்கு மகாசிவராத்திரி அன்று கண்டிப்பாக செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

* மகாசிவராத்திரி அன்று கண்டிப்பாக நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள் தவிர மற்றவர்கள் உணவு அருந்தக் கூடாது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 08ம் தேதி வருவதால் அன்றைய தினம் காலை எழுந்தது முதல், மார்ச் 09ம் தேதி வரை காலை வரை உணவும் ஏதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மார்ச் 09ம் தேதி காலை 6 மணிக்கு பிறகே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.


* வீட்டில் உள்ள சிவ லிங்கம், சாளகிராமம், மூர்த்தங்கள் ஆகியவற்றிற்கு கண்டிப்பாக சிறிது தண்ணீராவது ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும்.

* வீட்டில் உள்ள சிவலிங்கம் அல்லது சிவனின் படத்திற்கு ஒரே ஒரு வில்வ இலையாவது படைத்து வழிபட வேண்டும்.

* அருகில் உள்ள சிவாலயத்திற்கு அபிஷேகத்திற்கு பால் மட்டுமாவது வாங்கி தர வேண்டும்.

* மார்ச் 08ம் தேதி காலை எழுந்தது துவங்கி, மார்ச் 09ம் தேதி இரவு வரை தொடர்ந்து சிவ நாமங்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

* மகாசிவராத்திரி நாளன்று இரவு நடைபெறும் மூன்றாம் கால பூஜையின் போது வரும் லிங்கோத்பவர் காலமாகிய இரவு 11.45 மணி முதல் 12.15 வரையிலான நேரத்தில் கண்டிப்பாக தியானம் மேற்கொள்ள வேண்டும்.

*இன்று நான்கு கால பூஜைகள் செய்வார்கள், எந்த பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இரவு 11.45 முதல் 12.15 வரையிலான லிங்கோத்பவர் காலத்தில் கட்டாயமாக கண் விழித்து சிவபெருமானை வழிபடுவது நல்லது.இந்த நேரத்தில் நீங்கள் வேண்டும் எதுவும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு காரியம் ஆலயத்தில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். அதாவது இன்று மாலை தான் சதுர்த்திசி தொடங்குகிறது. அந்த நேரத்தில் ஆலயத்திற்கு சென்று சுத்தமான பசு நெய்யில் தீபம் ஏற்ற வேண்டும்.

*இன்று நீங்கள் ஏற்றக்கூடிய இந்த ஒரு தீபம் உங்களுடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய யோகத்தை அமைத்துக் கொடுக்கும். அற்புதமான இந்த நாளை பயன்படுத்தி நம்முடைய கஷ்டங்கள் தீர்ந்து ராஜபோக வாழ்க்கை வாழ வழி தேடிக் கொள்வோம்.

இந்த பசு நெய் தீபத்தை ஆலயத்தின் சார்பாக எரியும் விளக்கில் நெய் ஊற்றியும் ஏற்றலாம். ஆனால் இன்னொருவர் ஏற்றிய தீபத்தில் நெய் ஊற்றி ஏற்றக் கூடாது. அதே போல் அந்த விளக்கை சுத்தம் செய்யாமல் நெய் ஊற்றி ஏற்றாதீர்கள் இது பலனை தராது. பசுவில் இருந்து கிடைக்கும் அனைத்திலும் மகாலட்சுமி தாயாரின் வாசம் இருப்பதாக ஐதீகம்.

* மகாசிவராத்திரி அன்று கண்டிப்பாக தூங்கக் கூடாது. மார்ச் 08ம் தேதி காலை எழுந்தது முதல் விரதமாக இருந்து அன்று பகல், இரவு, மார்ச் 09ம் தேதி பகல் பொழுதில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. மார்ச் 09ம் தேதி இரவு தான் தூங்க வேண்டும்.

* மகாசிவராத்திரி அன்று அசைவம் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. மது, புகை போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

* மகா சிவராத்திரி அன்று இரவு கண் விழிக்க வேண்டும் என்பதற்காக சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களை பார்த்துக் கொண்டும், வீண் பேச்சுக்கள் பேசிக் கொண்டும் கஷ்டப்பட்டும் கண்விழிக்கக் கூடாது.

Trending News

Latest News

You May Like