சூரியன் மேற்கே உதித்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது - சேகர் பாபு..!
செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பாஜக ஆட்சி வந்ததும், பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியது தொடர்பான பதில் அளித்தவர், திமுகவை பொறுத்தவரை ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒரு சேர்ந்த நாடு . இதில் பெரியார் கொள்கை ஏற்று கொள்ளப்பட வேண்டியவை,
இந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. முதல் கையெழுத்து என்று சொல்பவர் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்குமே தவிர தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. எத்தனை ஐடி ரெய்டு, எத்தனை இடி ரெய்டு நடத்தினாலும் சரி,
தமிழகத்தை பொறுத்தவரை இது திராவிட மண், தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு இரும்பு மனிதராக இருக்கக்கூடிய ஸ்டாலின் தலைமையில் தான் எப்போதுமே இருக்குமே தவிர திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை இன்னும் கால் நூற்றாண்டுகளுக்கு அசைக்க முடியாது என்றார். திமுகவின் வாக்கு வங்கி 20% அதிகரித்துள்ளது. அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தை கைப்பற்றுகிற வாய்ப்பை தமிழக மக்கள் எந்நாளும் வழங்க மாட்டார்கள் என்றார்.