1. Home
  2. தமிழ்நாடு

வலி வரலனாலும் பரவால...குழந்தையை சீக்கிரமா எடுத்துடுங்க - அமெரிக்காவில் குழந்தை பிறக்க இந்தியர்கள் அவசரம்..!

1

புதிதாக அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடியான சட்ட திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
 

அதில் ஒன்று தான் பிறப்புரிமை சார்ந்த அதிரடி சட்டம். அமெரிக்க குடிமக்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகள் அந்நாட்டு குடிமக்களாக அங்கீகாரம் பெறுவர். இல்லையெனில் கிரீன் கார்டு வைத்திருந்தால் அவர்களது குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை சான்று பெறலாம். இவர்களை தவிர புலம்பெயர்ந்தவர்கள் ஏராளம் இருக்கின்றனர். அவர்கள் அமெரிக்காவிலேயே குழந்தை பெற்றுக் கொண்டால் அமெரிக்கர்கள் என்ற பிறப்புரிமை சட்டம் அமலில் இருந்து வந்தது.
 

இதன்மூலம் வேலைக்காக சென்றவர்கள் அங்கேயே செட்டில் ஆகி தங்களது குழந்தைகளை அமெரிக்க குடிமக்களாக வளர்க்கும் சூழல் இருந்தது. இந்த சலுகையால் அந்நாட்டின் சலுகைகளை பெற்று உயர்தர வாழ்க்கையை வாழும் வாய்ப்பை பெற திட்டமிட்டனர். இப்படியான கனவுகளுடன் வேலை தேடி அமெரிக்கா சென்றவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரது கனவையும் பொய்யாக்கும் வகையில் ட்ரம்ப் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது அமலில் உள்ள பிறப்புரிமை சட்டத்தில் உள்ள சலுகைகள் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி உடன் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார். அதன்பிறகு புலம்பெயர்ந்தவர்கள் யாராவது அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு அங்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படாது. அமெரிக்க குடிமகனாக, குடிமகளாக வளர்க்க முடியாது.

ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவின் படி பார்த்தால் இன்னும் 28 நாட்கள் இருக்கின்றன. அதற்குள் குழந்தை பெற்று கொண்டால் அமெரிக்க குடியுரிமை பெற்றுவிட முடியும். இதனை கவனித்த புலம்பெயர்ந்த கர்ப்பிணிகள் பலரும் அடுத்த சில வாரங்களில் குழந்தை பெற்றுக் கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போதே மருத்துவமனைகளுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விடுங்கள்.
 

இந்த தேதியை குறித்து கொள்ளலாம் என்று அட்வான்ஸ் புக்கிங் செய்து வருகின்றனர். புலம்பெயர்ந்த கர்ப்பிணிகளால் மருத்துவமனைகள் பரபரப்பான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள இந்தியர்களும் வரும் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் குழந்தை பெற்று கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர்

Trending News

Latest News

You May Like