1. Home
  2. தமிழ்நாடு

ஒரு மனிதன் வீடு கட்ட நினைத்தால் கூட வரிதான் கட்ட முடியும் - சீமான் சுளீர்..!

Q

கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து எழுப்பி கேள்விகள் தொடர்பான வீடியோ, அதேசமயம் அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ என தொடர்ந்து வைரலாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் பேசு பொருளாக இருந்த இந்த பிரச்னை, தற்போது கொங்கு கள அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து, லண்டனில் இருந்த அண்ணாமலையே மன்னிப்பு கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் பாஜகவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்தான் மன்னிப்பு கேட்பதற்காக வந்தார். நாங்கள் மிரட்டி அவர் வந்ததாகவும், ஜாதி ரீதியாகவும் சிலர் சாயம் பூசுகின்றனர் என்று வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறுகையில், "கோவை அன்னபூர்ணா உரிமையாளரின் கேள்வியில் உள்ள உண்மை உங்களுக்குத் தெரியும். சரக்கு மற்றும் சேவை வரியால் வர்த்தகர்கள், வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சட்டை முதல் கடிகாரம் வரை எல்லாவற்றுக்கும் வரி. ஒரு மனிதன் வீடு கட்ட நினைத்தால் கூட வரிதான் கட்ட முடியும். மக்கள் வாழவே முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டனர். அதைத்தான் அவர் கேட்கிறார்.

அந்தக் கேள்வி நியாயம் என்பது நாடெங்கிலும் பரவி விட்டது. அதை அதிகாரம் பணிய வைக்கிறது. சீனிவாசன் வருத்தம் தெரிவித்தாலும் அவருடைய கேள்வியில் உள்ள உண்மையையும் சத்தியத்தையும் யாராலும் மறைக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like