ஓய்வுபெற்ற பின்னும் ஓயாத விளையாட்டு... பணமும் வட்டியும் தர வேண்டாம்... என்கூட தனிமையில்...

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டர் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. 60 வயதான அவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த பணத்தை வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு மட்டுமே அவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆரோக்கிய சாமியை தொடர்பு கொண்டு பணம் கேட்டிருக்கிறார்.
குடும்ப கஷ்டம் நிலவுவதால் 15 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் வேண்டும் என கேட்டு இருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஆரோக்கியசாமி,"உனக்கு நான் பணம் தருவதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை.. நீ எனக்கு அந்த பணத்தை திருப்பி தர வேண்டாம். எனக்கு மனைவி இல்லாததால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். தன்னிடம் தனிமையில் இருந்தால் போதும். பணத்தை திருப்பி தர வேண்டாம்" எனக் கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனக்கு வட்டிக்கு பணம் வேண்டாம் எனக் கூறிவிட்டு இப்படி அசிங்கமாக பேசாதீர்கள் என போனை கட் செய்து இருக்கிறார். அதற்கு பிறகு அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ஆரோக்கியசாமி வீட்டுக்கு வந்து பணத்தை தருகிறேன் இது குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என தொலைபேசியில் பேசியிருக்கிறார். ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என தெரிந்து கொண்ட அந்த பெண் தனது வீட்டிலேயே தொலைபேசியை மறைவான இடத்தில் வைத்து வீடியோவை ஆன் செய்து இருக்கிறார்.
அப்போது வீட்டுக்கு வந்த ஆரோக்கியசாமி அமர்ந்தபடி பேசி உள்ளார். அப்போது பணம் கேட்டால் என்னிடம் நீங்கள் தவறாக நடக்க முயற்சிக்கலாமா என அந்தப் பெண் கேட்டுள்ளார். அப்போதும் அவர் நான் பணம் தருவதெல்லாம் பிரச்சனை இல்லை நீயும் கஷ்டப்படுகிறாய் வா தனிமையில் இருக்கலாம் என கூறி திடீரென எழுந்து அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அவரை தள்ளிவிட்டு விட்டு வட்டிக்கு பணம் கொடுத்தால் கொடுங்கள் இல்லை என்றால் இங்கிருந்து வெளியே கிளம்புங்கள் என அவரை திட்டி வெளியே அனுப்பி இருக்கிறார்.
இந்த நிலையில் தனக்கு ஆரோக்கியசாமி பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை அந்த பெண் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆரோக்கியசாமிக்கு இதுதான் வேலை எனவும் வட்டிக்கு பணம் தருவதாக கூறி பல பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ஆரோக்கியசாமிக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.