கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் !

நாடுமுழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டபோதும் கொரோனா பாதிப்பு மட்டும் குறையவில்லை. அதேநேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பாசிட்டிவ் வருவது அதிகரித்து வருகிறது.
எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் மீண்டும் கொரோனா தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்:-
- முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என்றும் போதிய அளவு சுடு தண்ணீர் பருக வேண்டும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருத்துவரால் பரிந்துரைக்கப்படும், ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்
- உடல் ஒத்துழைத்தால் வீட்டு வேலைகளை மேற்கொள்ளலாம் என்றும் அலுவலகப்பணிகளை படிப்படியாக தொடங்கலாம்
- உடல் நலனுக்காக நடைப்பயிற்சி, யோகா, சுவாசப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்
- போதிய அளவு ஓய்வு எடுக்க வேண்டும். நன்றாக உறங்க வேண்டும்
- கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும்
- உடல் வெப்பம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்
- வறட்டு இருமல், தொண்டை வறட்சி, சளி பிரச்சனைகள் இருந்தால் நீராவி பிடிக்கலாம்
- மருத்துவரின் அனுமதியுடன் மருந்துகளை உட்கொள்ளலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
newstm.in