ஈரோடு எம்.பி மருத்துவமனையில் அனுமதி!
மதிமுக எம்.பி கணேசமூர்த்தி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு என்ன ஆனாது என்பது குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை. மருத்துவ அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது.