ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிறைவு!

ஈரோடு கிழக்கில் இன்று (பிப்.5) நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குசாவடிக்குள் வந்தவர்கள் மாலை 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
இத்தேர்தலில், திமுக வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 53 இடங்களில், 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பிப்.08ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.