1. Home
  2. தமிழ்நாடு

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் - செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் - செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!


‘நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்’ என, மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடந்தது.

மண்டல செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். மாநில தலைவர் சங்கரப்பெருமாள் தலைமை வகித்தார். பொருளாளர் சதீஷ், தலைமை நிலைய செயலாளர் லிங்கேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ‘நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும்.

பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களை 2020 - 2021ம் கல்வியாண்டிலேயே முழு நேர ஆசிரியராக பணி உயர்வு செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

Trending News

Latest News

You May Like