1. Home
  2. தமிழ்நாடு

திமுகவை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ் : டாஸ்மாக் மூலம் மட்டும் ரூ.22,000 கோடி மாமூல்..!

Q

திருவண்ணாமலையில்  எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, “தமிழகத்தில 6000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு மேலிடத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சென்றுகொண்டுள்ளது. அப்படி என்றால் மாதத்துக்கு 450 கோடி, வருடத்துக்கு 5,400 கோடி. அந்த வகையில் நான்கு ஆண்டுகளில் மதுக் கடைகளில் இருந்து மட்டும் 22,000 கோடி ரூபாய்முறைகேடு செய்த ஊழல் பணம் மேலிடத்துக்கு சென்றுள்ளது. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?

இந்த துறைக்கு அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இப்படிப்பட்ட அமைச்சர்களை வைத்துக்கொண்டு ஸ்டாலின், தனக்கு யார் யாரெல்லாம் கப்பம் கட்டுகிறார்களோ அவர்களுக்கு சிறந்த அமைச்சர் பட்டம் சூட்டுகிறார். அனைத்து அமைச்சர்களுக்கும் அந்த பட்டம் கிடையாது. யார் மேலிடத்திற்கு பணம் அதிகமாக கொடுக்கிறார்களோ அவர்கள்தான் சிறந்த அமைச்சர்கள்.

அதிமுகவில் இருந்து பலரும் திமுகவுக்கு சென்றுவிட்டனர். இப்போது இருக்கும் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர்கள். பலர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை எதற்காக அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக்குகிறார்கள் என்றால் இவர்கள் சரியான முறையில் மாமூல் வாங்கி மேலிடத்திற்கு கொடுப்பார்கள். ஆனால் திமுகவில் இரவு பகல் பாராமல் உழைத்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள் எல்லாம் ஓரம் கட்டுப்பட்டுவிட்டார்கள்.

திமுகவில் யார் மேலிடத்தை கவனிக்கிறார்களோ அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும். ஆனால், அதிமுகவில் யார் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்களோ அவர்களுக்கே நல்ல இலாகா கிடைக்கும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை சரியான முறையில கண்காணித்து மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பார்கள். அதனாலதான் அதிமுக ஆட்சியில பல்வேறு துறைகளில தேசிய அளவில விருதுகளை பெற்றிருக்கின்றோம். சிறந்த அரசாங்கம் என்று சான்றுகளை பெற்றிருக்கின்றோம்” என்று அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like