அதிமுகவில் பரபரப்பு… திடீர் ஆலோசனையில் ஈடுபட்ட ஈ.பி.எஸ்!

முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் உயர்நிலை கூட்டத்திற்கு பிறகு தனியாக இந்தக்கூட்டம் நடந்ததால் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.
அதிமுக உயர்நிலை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் வருகையின்போது ஆதரவாளர்கள் தனித்தனியாக வாழ்த்து முழக்கம் எழுப்பினர். இந்த விவகாரம் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அதிமுக செயற்குழு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையிலுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களான தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக அவர்கள் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.
newstm.in