1. Home
  2. தமிழ்நாடு

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஈபிஎஸ் வாழ்த்து!

1

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9.03 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பள்ளிக்கல்வியின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நீங்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து, நன்கு படித்து 12ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like