அமுலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை - சந்தேகங்களுக்கு இலவச எண்கள் அறிவிப்பு..!
நீலகிரி,கொடைக்கானல் மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.இதுமட்டும் அல்லாது, தங்கும் விடுதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, இன்று (மே 7) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில், இது தொடர்பான சந்தேகங்களை போக்கிக்கொள்வதற்காக தொலைபேசி எண்களை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்.
கொடைக்கானல், நீலகிரிக்குள் வரும் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்ட எல்லையான கல்லார் சோதனை சாவடியில் மாவட்ட வருவாய்த் துறையினர் இன்று காலை 6 மணி முதல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே மாவட்ட எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர். சுற்றுலா வருபவர்கள் tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொடைக்காணல் பகுதிக்கு வருகை தரும் அனைத்து வாகனங்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 04512900233 என்ற தொலைபேசி எண்ணிலோ 9442255737 என்ற கைபேசி எண்ணிலோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ. நா.பூங்கொடி, இ.ஆ.ப. அவர்கள் தகவல்.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டம். கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து ஊகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை -இ-பாஸ்(ePass) பதிவு செய்து வர வேண்டும்.
பயணிகள் "epass.tnega.org" என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் (Local ePass ) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண் 9442265737 என்ற கைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி. இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.