இன்று முதல் ஊட்டி கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்..!

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு இ பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அந்த நடைமுறை இப்போது மீண்டும் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த நடைமுறை இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி வார நாட்களில் 6000 வானங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ பாஸ் நடைமுறையில் உள்ளூர்வாசிகளுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தான் இந்த இ பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.