1. Home
  2. தமிழ்நாடு

இனி சுற்றுலா செல்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்..!

1

ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகினர். அதைத் தொடர்ந்து, அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வுசெய்த நீதிபதிகள், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்குக் குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களுக்கும் வருகை தந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டிக் காட்டினார்.

மேலும், இரு மாவட்ட ஆட்சியர்களும் அளித்த அறிக்கையில் கூறியுள்ள புள்ளி விவரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், அது தவறான முடிவுக்கு வழி வகுத்து விடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து பதிலளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தன்னிச்சையாக புகைப்படம் எடுக்கும் கேமராக்களை பொருத்த இருப்பதால், இனிமேல் முழுமையான புள்ளி விவரங்கள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இ-பாஸ் இல்லாமல் எந்த வாகனமும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த புதிய நடைமுறை வருகிற நவம்பர் 18-ம் தேதி அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like