1. Home
  2. தமிழ்நாடு

அகில இந்திய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு..!

1

சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கபட்டது. இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.வி.கிருஷ்ண மேனன் 1961 -ம் ஆண்டு திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது.

இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேருவதற்கு தயார்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 33 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. 

இந்தப் பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. தற்போதும் மேலும் சில பள்ளிகளை தொடங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது அமராவதி சைனிக் பள்ளி. இந்தப் பள்ளியானது இந்திய மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளியாகும்.  இந்தியாவிலுள்ள 33 சைனிக் பள்ளிகளில் அமராவதி சைனிக் பள்ளியும் ஒன்று. 

இந்த நிலையில், அகில இந்திய சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு 2024-25 -ஆம் ஆண்டு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ஆம் கல்வியாண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு 2024 ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது.   இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளம் வழியாக வரும் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  இதற்கு விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதர பிரிவினர் ரூ.650. இதனை இணையவழியில் செலுத்த வேண்டும்.

மேலும் இதுகுறித்து முழுமையான விவரங்களை www.nta.ac.in அல்லது  https://exams.nta.ac.in/AISSEE/images/FAQ-Gen.pdf இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின்  aissee@nta.ac.in  என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like