பொறியியல் படிப்பு தரவரிசைப்பட்டியல் வெளியீடு தேதி மீண்டும் மாற்றம் !
பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகின்ற 28ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிப் பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் நம்பர் ஆகஸ்ட் 26ஆம் தேதி வழங்கப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்தது.
எனினும் சில மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கேட்டதால், செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட வேண்டிய தரவரிசைப் பட்டியல் 25ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் செப்டம்பர் 28ம்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுவிட்டதா என்பதை www.tneaonline.org என்ற இணையதளத்தில் உறுதி செய்து கொள்ளலாம்.
newstm.in