1. Home
  2. தமிழ்நாடு

பொறியியல் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!

Q

நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பில் சேருவதற்கு 2,53,000 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,98,853 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். அவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி சம வாய்ப்பு எண் இணைய வழியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. சென்னை கிண்டியில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டார்.

சான்றிதழ் பதிவேற்றிய ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் கவுன்சில் ஜூலை 22 ஆம் தேதி தொடங்க உள்ளது என தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் அறிவித்துள்ளார். 

பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி முதலிடமும் , நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடமும் , நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேலம் மாணவி ரவணி முதலிடமும் , கோவை மாணவி கிருஷ்ணா அனூப் 2ம் இடமமும் பிடித்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேருவோருக்கான கலந்தாய்வு முதல் 2 நாட்கள் நடைபெறும்; பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 29ம் தேதி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 பேர் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்; அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் 32,223 மாணவர்கள் பொறியியல் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like