1. Home
  2. தமிழ்நாடு

வீட்டு மாடியில் பதுங்கியிருந்து கொள்ளை அடிக்கும் பொறியியல் பட்டதாரி!

வீட்டு மாடியில் பதுங்கியிருந்து கொள்ளை அடிக்கும் பொறியியல் பட்டதாரி!


வீடுபுகுந்து கொள்ளையடிக்க மொட்டை மாடியில் பதுங்கியிருந்த பொறியியல் பட்டதாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

உணவு டெலிவரி வேலை செய்து வந்த முத்தழகன் (23) என்ற இளைஞர் வீட்டில் யாரும் இல்லததை நோட்டமிட்டு மதுரவாயல் அடையாளம்பேட்டில் உள்ள பிரபாகர் (53) என்பவர் வீட்டு மாடியில் பதுங்கியிருந்தார்.

இந்நிலையில் திடீரென பிரபாகர் வீட்டின் மாடிக்கு சென்ற போது பதுங்கியிருந்த முத்தழகனை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார். தப்பிச் செல்ல முயன்ற அவரை பிரபாகர் துரத்திப்பிடித்தார்.

விசாரிக்கும் போது கொளத்தூரை சேர்ந்த முத்தழகன் பி.இ. படித்து விட்டு உணவு டெலிவரி வேலை செய்து வந்ததும் உணவு டெலிவரி செய்யும் போது ஆளில்லா வீட்டை நோட்டமிட்டு திருட திட்டம் தீட்டியது தெரியவந்தது.

கொள்ளை அடிக்க வந்த இடத்தில் மொட்டை மாடியில் இருந்து இறங்க வழி தெரியாததால் அங்கேயே தூங்கியதாக விசாரணையில் தெரிய வந்தது. முத்தழகனிடம் மதுரவாயல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like