நாளை முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்..!
அண்ணா பல்கலைக்கழக வளாக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு படிப்புகளுக்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வகுப்புகள் தொடங்கிய பின்னர் மாணவர்களுக்கான இறுதி வேலை நாள் டிசம்பர் 13ஆம் தேதி என்றும், செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி அன்று தொடங்கும் என்றும், செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்து அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜனவரி 20ஆம் தேதி (20-1-2025) அன்று தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.