1. Home
  2. தமிழ்நாடு

பிரபல கூரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை..!

Q

தமிழகத்தை தலைலையிடமாக உழைப்பையே மூலதனமாக கொண்டு துவங்க்பட்ட எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனங்கள் இன்று 1946 கிளைகளையும் 340 இணைப்பு மையங்களோடு விரிவடைந்து இந்நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளும், தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். 2020-ம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் கிளைகளை விரிவுப்படுத்தி சாதனை படைக்கும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகின்றது.
எஸ்.டி. கூரியர்ஸ் கல்வி அறக்கட்டளையின் மூலமாக வருடந்தோறும் தமிழகத்தில் படிக்க ஆர்வம் இருந்தும் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு 10, 12 ஆம் வகுப்புகள், கல்லூரியில் படிப்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதோடு அரசு படிப்பில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகையும், இவர்களின் அண்ணலார் கல்வி அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே பல்லாவரம் எஸ்.டி கொரியர் தலைமை அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.டி கொரியர் நிறுவனம் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரி என்பவருக்கு சொந்தமானதாகும். கொரியர் நிறுவனத்தின் மூலம் பொருட்கள் எதுவும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவார் என தெரிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவரது சகோதரர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like