1. Home
  2. தமிழ்நாடு

இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு..!

Q

அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மிந்த்ரா மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள், பொருட்களை மொத்தமாக வாங்கி, உடனடியாக பணத்தை செலுத்தும் முறையில் வணிகம் (Wholesale Cash & Carry' model)செய்வதாக கூறிவிட்டு பல நிறுவனங்களின் பொருட்களை ஒரு நிறுவனத்தின் பெயரில் (Multi-Brand Retail Trading (MBRT)) முறையில் வணிகத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தன.
விசாரணையில், மொத்த வணிகம் பெயரில் மிந்த்ரா நிறுவனத்துக்கு ரூ.1,654.35 கோடி கிடைத்துள்ளது. ஆனால், அதில் குறிப்பிட்ட அளவு பொருட்கள்,M/s Vector E-Commerce Pvt. Ltd என்ற நிறுவனத்துக்கு விற்றது தெரியவந்தது. இந்த நிறுவனம் மிந்த்ரா நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதும், நுகர்வோர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதில் எப்டிஐ விதிகள் மீறப்பட்டு உள்ளன.
எப்டிஐ திருத்த விதிகளின்படி, மொத்த பொருட்கள் விற்பனை முறையில், தங்களது 25 சதவீத பொருட்களை மட்டுமே, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு விற்க வேண்டும். ஆனால், இந்த எல்லையை மீறி மிந்தரா நிறுவனமானது, vector E-Commerce pvt நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மிந்த்ரா மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள் எடிஐ கொள்கை தொடர்புடைய விதிகள் மற்றும் 1999ம் ஆண்டு சட்டம்FEMa6(3)(b) கீழ் விதிகளை மீறியுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், FEMA சட்டப்பிரிவு 16(3) ன் கீழ் மிந்த்ரா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like