1. Home
  2. தமிழ்நாடு

தேர்தலுக்காக வெற்று அறிவிப்புகள்...இது வெறும் விளம்பர பட்ஜெட் - இ.பி.எஸ் அறிவிப்பு..!

1

தமிழ்நாடு பட்ஜெட் 2025 இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.கருத்து தெரிவித்து உள்ளனர்.

தி.மு.க.,வின் பல்வேறு வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ரேஷனில் ஒரு கிலோ சக்கரை அதிகமாக வழங்கப்படும் என்ற தி.மு.க.,வாக்குறுதி என்ன ஆனது? நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஒரு ஆண்டில் எப்படி 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது சாத்தியமா?கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு எங்கே? தேர்தலுக்காக வெற்று அறிவிப்புகள். விளம்பர பட்ஜெட்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புகளை நிரப்பவே முடியாது. நாளுக்கு நாளுக்கு கடன் அதிகரித்து கொண்டே செல்கிறது. நிர்வாகத் திறமையற்ற அரசு நடக்கிறது. மக்களின் கோபம், கொந்தளிப்பை குறைக்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது.
 

Trending News

Latest News

You May Like