1. Home
  2. தமிழ்நாடு

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் வேலைவாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் வேலைவாய்ப்பு!


தொழிலாளர் நலத்துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரெக்கார்டு கிளார்க் எனப்படும் பதிவுரு எழுத்தர் பணியில் 37 இடங்களும் ஓட்டுநர் பணியில் 32 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. பதிவுரு எழுத்தர் பணிக்கு பத்தாம் வகுப்புப் படித்திருக்கவேண்டும். ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

ஓட்டுநர் உரிமம் (இலகுரக ஓட்டுநர் உரிமை புதுப்பிக்கப்பட்டது) அவசியம். வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.இரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் 1.7.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் வேலைவாய்ப்பு!

இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து, ரூ.500க்கான விண்ணப்பக் கட்டணத் தொகையை இணையதளம் மூலமாக செலுத்தவேண்டும்.மாற்றுத்திறனாளிகள், பட்டியலினம், பட்டியலினம் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ரூ. 250க்கான கட்டணத் தொகையைச் செலுத்தவேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.9.2020 மாலை 5.45 மணி வரை

விவரங்களுக்கு: https://labour.tn.gov.in

newstm.in

Trending News

Latest News

You May Like