1. Home
  2. தமிழ்நாடு

5,000 பேருக்கு வேலைவாய்ப்பு...! ராணிப்பேட்டையில் அடியெடுத்து வைக்கும் டாடா..!

1

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் துறை சார்பில் பல்வேறு நிறுவனங்கள் அடியெடுத்து வைத்து வரும் நிலையில் தற்போது ராணிப்பேட்டையில் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று அடியெடுத்து வைக்க இருப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க இருக்கிறது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார்களை தயாரிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது.

Trending News

Latest News

You May Like