நடக்க முடியாமல் சென்ற முதியவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளுவதற்கு லஞ்சம் கேட்ட ஊழியர்கள் !! 6 வயது பேரன் செய்த செயல்.

தியோரியா மாவட்ட மருத்துவமனையில் முதியவர் ஒருவர் வெளிநோயாளியாக நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் செல்லும் ஒவ்வொரு முறையும் அங்கு பணியில் இருக்கும் ஊழியர் , முதியவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்ல ரூ.30 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதை கொடுக்க முடியாத அந்த முதியவர், தனது மகள் மற்றும் பேரனுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, முதியவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, மகள் முன்னே இழுத்துக் கொண்டு செல்ல , பேரன் பின்னால் தள்ளிச் சென்றான்.
இந்தக் காட்சிகளை அங்கிருந்த ஒருவர், வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்திய தியோரியா ஆட்சியர், பணம் கேட்ட வார்டு உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தர விட்டார்.
Newstm.in