ஊழியர்களே உஷார்..! இனி அடையாள அட்டை கட்டாயம்.. இல்லாவிட்டால் நடவடிக்கை..!
தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அடையாள அட்டைகளை பெரும்பாலான அரசு ஊழியர்கள், அதிகாரிகள் முறையாக அணிவது கிடையாது.
இந்நிலையில் தான் பணியின்போது தமிழக அரசு ஊழியர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மை துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛பணியின் போது தமிழகத்தில் அரசு ஊழியர்கள் கட்டாயம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும். இந்த அடையாள அட்டையை அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், துறை தலைவர்கள் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி அடையாள அட்டை அணியாமல் பணி செய்யும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.