1. Home
  2. தமிழ்நாடு

ஊழியர்கள் அதிர்ச்சி..! மீண்டும் ஆட்குறைப்பில் இறங்க பேடிஎம் திட்டம்..?

1

2000ஆம் ஆண்டு விஜய் சேகர் ஷர்மா என்பவரால் உருவாக்கப்பட்ட பேடிஎம் நிறுவனம் 2015க்குப் பிறகு முக்கிய இடத்தைப் பிடித்தது.இந்தியாவிலேயே முன்மாதிரியாக இருந்த பேடிஎம் மார்ச் 2024உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.550 கோடி நிகர இழப்பை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.169 கோடியாக இருந்தது. இதே காலாண்டில் இருந்த ரூ.2,334 கோடியுடன் ஒப்பிடுகையில் அறிக்கையில் காலாண்டு செயல்பாடுகளின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 3% சரிந்து ரூ.2,267 கோடியாக உள்ளது.இதற்கு முக்கிய காரணம் இந்திய ரிசர்வ் வங்கி அந்த நிறுவனத்தின் மீது மேற்கொண்ட தடையும் பேடிஎம் வாலட்டுகளை தடை செய்ததும் ஆகும்.

புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில், பேடிஎம் பங்குகள் 1.3% குறைந்து ரூ. 347 இல் வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால் பின்னர் பேடிஎம்மின் ஒரு பங்கு விலை 0.085% உயர்வுடன் ரூ.352 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

இதற்கிடையே ஜூன் முடிய காலாண்டு வருவாய் 15 பில்லியன் ரூபாய் முதல் 16 பில்லியன் ரூபாய் வரை சரிய நேரிடலாம் என்று பேடிஎம் எச்சரித்துள்ளது.

ஆனால் அதன் பிறகு அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என அது கூறியுள்ளது.

அந்த முன்னேற்றகரமான நிலையை எட்டுவதற்கு நிறுவனத்தை சீர்படுத்தவும் ஊழியர் செலவுகளைக் குறைக்கவும் மற்றும் முக்கியம் அல்லாத வணிகங்களை முற்றிலும் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like