1. Home
  2. தமிழ்நாடு

27 மாவட்டங்களுக்கு அவசர உத்தரவு..!

1

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம் எழுதி உள்ளது.

கனமழையால் ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் மாவட்ட நிர்வாகங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், பேரிடர்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை,  கிருஷ்ணகிரி, பெரம்பலூர், ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like