1. Home
  2. தமிழ்நாடு

போக்குவரத்து துறைக்கு தமிழக அரசு அவசர சுற்றறிக்கை !!

போக்குவரத்து துறைக்கு தமிழக அரசு அவசர சுற்றறிக்கை !!


கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 378 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன் படி ஊரடங்கு விதிகளை பின்பற்றி போக்குவரத்து சேவையளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது ;

ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், இந்த மாதம் 20-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் கூடுதலாக சில நடவடிக்கைகளை அனுமதிக்கலாம். என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன் இந்த கூடுதல் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தும். இதற்கான அரசு உத்தரவில் , அனைத்து அரசுத் துறைகளும் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களைக் கொண்டு இயங்கலாம்.

தேவைக்கு ஏற்ப , ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் வந்து பணியாற்றலாம். பி மற்றும் அதற்கு கீழ் உள்ள பிரிவு அலுவலர்களில் 33 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கிடையேயான சமூக இடைவெளி உறுதி செய்யப்பட வேண்டும்.

எப்படி என்றாலும் , பொதுமக்களுக்கு சேவை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தேவையான அளவுக்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே , இந்த வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியும் , சூழ்நிலையை கருத்தில் கொண்டும், போக்குவரத்துத் துறை இணை மற்றும் துணை ஆணையர்கள் , மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like