1. Home
  2. தமிழ்நாடு

எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது..!

1

டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்" என பதிவிட்டார். 

இந்தப் பதிவுக்கு முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை” என பதிலளித்தார்.

பதிலுக்கு, எலான் மஸ்க் “எதையும் ஹேக் செய்யலாம்” என ராஜீவ் சந்திரசேகருக்கு பதில் கொடுத்தார்.

இருவரின் விவாதத்துக்கு மத்தியில் இண்டியா கூட்டணி தலைவர்களும் இவிஎம் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என குரல் கொடுத்தனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் முறையாக செயல்படாததால் நமது ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. தேர்தல் நடைமுறையில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காததால் மோசடி மூலம் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டப்படும் ஆபத்து உள்ளது.” என அச்சம் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like