1. Home
  2. தமிழ்நாடு

ஸ்டார்ஷிப் ராக்கெட் அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும் - எலான் மஸ்க்..!

Q

மார்ச் 14ம் தேதி 2002ம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அதன் 23வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்ப மும்முரம் காட்டி வருகிறது. கடந்த 8 முறையாக, 'ஸ்பேஸ் எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் திட்டம் தோல்வி அடைந்தது.
மார்ச் 7ம் தேதி ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. இந்நிலையில் 'ஸ்பேஸ் எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அடுத்த ஆண்டு (2026) இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும்' என எலான் மஸ்க் தெரிவித்தார். செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ஸ்டார்ஷிப்பில் மனித ரோபோவும் சேர்த்து அனுப்பப்பட உள்ளது.
அதேநேரத்தில், 2029ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தரையிறங்கலாம். இது 2031ம் ஆண்டிற்குள் கட்டாயமாக நடக்க வாய்ப்புள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பிய நாடுகளில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மற்றும் யு.ஏ.இ., ஆகியவை அடங்கும்.

Trending News

Latest News

You May Like