1. Home
  2. தமிழ்நாடு

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி.. டிரம்ப் அதிரடி!

1

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப்-ஐ கடந்த ஆகஸ்ட் 13 அன்று நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது.

இந்த நிலையில்தான், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க் மந்திரிசபையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவும் டிரம்ப் அதிபரானால் வெள்ளை மாளிகை ஆலோசகராக எலான் மஸ்க் இருக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் எலான் மஸ்க் அதை முற்றிலும் மறுத்திருந்தார். இந்த நிலையில்தான் டிரம்ப் பொது வெளியில் இதுகுறித்து வெளிப்படையாகவே தற்போது பேசியுள்ளார்.

2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடதக்கது

 இதற்கு எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான எக்ஸ்-ல் பதில் அளித்துள்ளார். அதில், “சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவின் கீழ், “அரசாங்கத் திறன் துறை (DOGE)” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மேடையின் முன் எலான் மஸ்க் நிற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.


 

Trending News

Latest News

You May Like