பிரபல பாடகியிடம் எல்லை மீறிய எலான் மஸ்க்..!
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு குழந்தை இல்லாத பூனை பிரியர் என்று கேலி செய்தார். மேலும், “உனக்கு ஒரு குழந்தையைத் தருகிறேன், உன் பூனையை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன்” என்று அவர் கூறிய பதில் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஸ்கின் கருத்து பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவ்வாறு கருத்து தெரிவிப்பது தவறானது என்றும், பெண் வெறுப்பு என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.