1. Home
  2. தமிழ்நாடு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் : எலான் மஸ்க் கணிப்பு..!

1

கனடாவை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் கடந்த மாதம் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின. 

காலிஸ்தான்  பயங்கரவாதி  எதிராக வன்முறையை தூண்ட இந்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார் என்று கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.  

இப்படி தொடர்ச்சியாக இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால்  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு  உள்நாட்டிலும் உலக நாடுகள் மத்தியிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது,

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவிருக்கும் தேர்தலில் காணாமல் போய் விடுவார் எனக் கூறியுள்ளார்.  கனடாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

Trending News

Latest News

You May Like