1. Home
  2. தமிழ்நாடு

சீன பிரதமரை சந்தித்தார் எலான் மஸ்க்..!

1

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட எலான் மஸ்க், கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளார். 


அந்த வகையில், தனது சீன பயணத்தின் போது தானியங்கி வாகனத்திற்கான மென்பொருளை அறிமுகம் செய்வது மற்றும் கடல் கடந்து தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கான அனுமதி பெறுவது தொடர்பாக சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும், சீன பயணத்தின் போது எலான் மஸ்க் அந்நாட்டு பிரதமர் லி கியாங்கை நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது சீனாவில் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. 

இந்த சந்திப்பு தொடர்பாக எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் லி கியாங்கை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். ஷாங்காய் நாட்கள் தொடங்கி பல ஆண்டுகளாக நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துள்ளோம்  என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் இணைத்துள்ளார்.  

Trending News

Latest News

You May Like