1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து..!

1

உலக அளவில் பல்வேறு சமூக வலை தளங்கள் இருந்தாலும் தங்கள் கருத்துக்களை பதிவிட பிரபலங்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக அது ட்விட்டர் என்ற பெயரில் உலக அளவில் செயல்பட்டு வந்தது.

குஜராத் முதலமைச்சர் ஆக இருந்தபோது அதாவது 2009 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ட்விட்டரில் கணக்கை தொடங்கினார். கட்சி மற்றும் அரசின் அறிவிப்புகளை வெளியிடுவது, பல்வேறு பிரச்னைகள் குறித்த தன் கருத்துக்களை கூறுவது, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்வது மற்றும் மக்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுவதற்கு எக்ஸ் சமூக வலைதளத்தை மோடி பயன்படுத்துகிறார்.பிரதமர் மோடிக்கு என்று தனியாக ஒரு யூடியூப் பக்கமும் இருக்கிறது. அதில் 25 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் அவரை ஃபாலோவ் செய்கின்றனர்.மேலும் இன்ஸ்டாகிராமிலும் 91 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் எக்ஸ் பக்கத்தில் உலக அளவில் அதிக நபர்கள் ஃபாலோ செய்தும் நபராக பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்து இருக்கிறார்.அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து தற்போது 10 கோடி என்ற சாதனை எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இப்பட்டியலில் உலகில் அரசியல் தலைவர்களில் பாரக் ஒபாமாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்திலும், ஒட்டுமொத்தமாக 7வது இடத்தில் மோடி உள்ளார். இதற்காக, பிரதமர் மோடிக்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் இது குறித்து எக்ஸ் தளத்தில், ‛அதிகம் பின்பற்றப்படும் உலகத் தலைவராக இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்!' என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

ஃபாலோவ் செய்கின்றனர். அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை 38.1 மில்லியன் ஃபாலோயர்களும், துருக்கி அதிபர் எர்டோகனை 21.5 மில்லியன் ஃபாலோயர்களும், ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமதுவை 11.2 மில்லியன் ஃபாலோயர்களும் , மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவலை 10.9 மில்லியன் ஃபாலோயர்களும், கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவை .6.5 மில்லியன் ஃபாலோயர்களும், இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனியை 2.4 மில்லியன் ஃபாலோயர்களும் பாலோ செய்கின்றனர்.

 


 

Trending News

Latest News

You May Like