1. Home
  2. தமிழ்நாடு

ஐ-போனுக்கு தடை விதித்த எலான் மஸ்க்..!

1

ஏஐ தொழில் நுட்பம் மொத்தமாக டெக் உலகை ஆட்டி படைக்க தொடங்கியுள்ள நிலையில், உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன்களில் சாட் ஜிபிடி தொழில் நுட்பத்தை அமல்படுத்தும் விதமாக ஏஐ தொழில் நுட்பத்தின் சில அம்சங்களை தனது செயலிகள் மற்றும் இயங்கு தளத்தில் கொண்டு வர இருப்பதாகவும் இதற்காக ஓபன் ஏஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ஆப்பிள் அறிவித்தது.

இந்த நிலையில்தான், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்தால், ஐபோன்களுக்கு தனது அலுவலகத்தில் தடை விதிப்பேன் என்று எலான் மஸ்க் எச்சரித்துள்ளர். இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது இயங்கு தளம் (ஓஎஸ்) களில் ஓபன் ஏஐ-யை ஆப்பிள் நிறுவனம் இணைத்தால், ஆப்பிள் டிவைஸ்களுக்கு எனது கம்பெனிகளில் தடை விதிக்கப்படும்.

ஏனெனில், ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல் இதுவாகும். விசிட்டர்களும் அலுவலகத்திற்கு வரும் முன்பே அவர்களிடம் ஆப்பிள் கருவி இருக்கிறதா என சோதிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like