மின் கட்டண உயர்வா? 'அரை கரண்ட்' விளக்கம் போதாது - SG சூர்யா..!

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது,
வரும் ஜூலை 1 ம் ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன.
இப்போதே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவும் பகலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அவ்வப்போது நிகழ்ந்து மக்களை வேதனைப்படுத்தி வருகிறது. எனவே மின் கட்டணம் தொடர்பாக.... கிராமங்களில் சொல்வதுபோல, 'அரை கரண்ட்' விளக்கம் அளிக்காமல் தெளிவான -முழுமையான விளக்கம் அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என பதிவிட்டுள்ளார்.