1. Home
  2. தமிழ்நாடு

இனி குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் அவசியம்...!

1

 காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் பகுதியாகவும், வாகன மாசு குறையவும் மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் குடியிருப்பு, வணிக மற்றும் கல்வி வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என மாநில அரசு அரசிதழ் மூலம் அறிவித்துள்ளது. 

அரசு அறிவிப்பில், 750 சதுர மீட்டரை மீறும் கட்டிடங்கள் மற்றும் எட்டு வீடுகளுக்கு மேலான அடுக்குமாடி குடியிருப்புகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒவ்வொரு பார்க்கிங் இடத்திலும் சார்ஜிங் பாயின்ட் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 50 வீடுகளைத் தாண்டும் குடியிருப்புகளில் பார்வையாளர்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 300 சதுர மீட்டருக்கு மேற்பட்ட எஃப்எஸ்ஐ கொண்ட வணிக வளாகங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மொத்த பார்க்கிங் பரப்பளவில் குறைந்தது 10% பகுதி மின்சார வாகன சார்ஜிங் வசதிக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசிதழ் தெளிவுபடுத்தியுள்ளது.

மின்சார வாகன எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வரும் நிலையில், இந்த புதிய விதிநெறி மாநிலத்தில் சார்ஜிங் வளங்களை விரைவாக விரிவாக்கும் என அரசு நம்புகிறது.

Trending News

Latest News

You May Like