இன்று கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து..!
செங்கல்பட்டு பணிமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.31, 9.51, 10.56, 11.40, மதியம் 12.25 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 7.27 மணிக்கு திருமால்பூருக்கும் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 11.30, மதியம் 12, 1.10, 1.45, 2.20 மணிக்கும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கும் கடற்கரை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக கடற்கரையில் இருந்து காலை 7.27 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 9.31, 10.56, மதியம் 12.25 சிங்கப்பெருமாள் கோவிலுக்கும், காலை 9.51, காலை 11.40 மணிக்கு காட்டாங்கொளத்தூருக்கும் சிறப்பு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும்.
அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.45 மணிக்கும், சிங்கப்பெருமாள் கோவில் இருந்து காலை 11.43, மதியம் 1.23, 2.33 மணிக்கும், காட்டாங்கொளத்தூரில் இருந்து மதியம் 12.20, 2.05 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
.png)