1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் தமிழ்நாடு முழுவதும் மின்சார பேருந்துகள் : அமைச்சர் சிவசங்கர்..!

1

கடலூரில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கத்தின் 9ஆவது மாநில மாநாட்டில் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதற்கட்டமாகச் சென்னையில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதற்காக டெண்டர் வரவுள்ளது. இந்த மின்சார பேருந்து சேவையின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற நகரங்களுக்கும், மாநகரங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

15 ஆண்டுக்காலம் முடிந்த பேருந்துகள் என 1500 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்தினால் கிராம பேருந்து சேவை பெருமளவில் பாதிக்கப்படும். இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அந்த 1500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறதுதிய பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் புதிய பேருந்துகள் வந்துவிடும்.

அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு முந்தைய பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்படும்.தற்போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து மற்ற போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்” என்றார்.

Trending News

Latest News

You May Like