1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் முதல் சென்னையில் மின்சார சேவை பேருந்து இயக்கம்..!

1

சென்னையில் ஜூன் 30-ம் தேதி முதல் மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

முதல்கட்டமாக 120 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 2025-ம் ஆண்டுக்குள் 625 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான, நவீன வசதிகளுடன் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் சார்ஜர் வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் எளிதாக ஏறி இறங்கும் வகையில் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சுலபமாக ஏறி இறங்கும் வகையில் மின்சார பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பின்னர், படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் முதல் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட இருக்கும் நிலையில் படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் கூறுகையில் : மின்சார பேருந்தில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாம் செல்லும் இடங்களை கண்டறியும் வகையில் வாய்ஸ் முறையில் பேருந்து நிறுத்தம் அறிவிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார பேருந்தில் பயணம் செய்யும் வகையில் சிசிடிவி கேமிரா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்சார பேருந்து சேவை வெற்றி அடைந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார். இந்த மின்சார பேருந்து சேவையை பயன்படுத்த பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like