1. Home
  2. தமிழ்நாடு

நவம்பர் 3ம் தேதி தேர்தல்! 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

நவம்பர் 3ம் தேதி தேர்தல்! 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை!


தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டப்பேரவையின் ஆயுள் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனால் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேநேரத்தில் பிற மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் காலியாக உள்ள இரு பேரவைத் தொகுதிகளுக்கும், பீகாரில் காலியாக உள்ள மக்களவைத் தொகுதிக்கும் நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் காலியாக உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like