மஞ்சுவாரியரின் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை..!
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே நகர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக கேரள பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருப்பது மலையாள நடிகை மஞ்சுவாரியர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து விவரங்களை சேகரித்து கொண்ட காவல்துறையினர், அவரது காரை சோதனையிட்டனர்.
காரில் மஞ்சுவாரியர் இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் உடனே அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஒரு பக்கம் சோதனை நடந்த போதும் அவற்றை பெரிதும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.