சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியில் தனித்து போட்டியிட்ட அவருக்கு விவசாய சின்னம் கிடைக்காததால் சுயேட்சை சின்னமான மைக் சின்னத்தில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சென்று 8.22 சதவீத வாக்குகளை பெற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தார். மறுபுறம் சீமான் பேச்சால் அதிருப்தி அடைந்த அக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
அது மட்டும் அல்லாமல் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒருமையில் சீமான் பேசியதை அடுத்து அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இவ்வளவு சர்சைகளுக்கு மத்தியில் சீமானுக்கு டெல்லியில் இருந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்தது.அதாவது கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவ்வறிவிப்பை கடிதம் வாயிலாக இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என நாம் தமிழர் கட்சி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு உழவு செய்யும் விவசாயி மற்றும் புலி சின்னங்களை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய வெப்சைட்டில் உள்ள ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.