1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை..!

1

பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, நட்சத்திர பேச்சாளர்கள் தலைமையிலான பிரசாரத்தின் தரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது., இரு கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களும் கட்டுப்பாட்டை கடைபிடித்து, கூடுதல் கவனத்துடன் நாகரீகமாக பேச வேண்டும். மதம் மற்றும் ஜாதி ரீதியாக பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும். சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பிரசாரம் செய்வதை பா.ஜ., நிறுத்த வேண்டும். மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பா.ஜ.க. நாட்டின் சமூக கட்டமைப்பு தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. 

அரசியலமைப்பு நீக்கப்படும் என தவறாக பொருள்படும்படி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி நட்சத்திர பேச்சாளர்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்த வேண்டும். பாதுகாப்பு படை விவகாரங்களை அரசியலாக்கக்கூடாது. பாதுகாப்பு படையினரின் சமூக பொருளாதார கூட்டமைப்பு தொடர்பாக பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது என காங்கிரஸ் அறிவுறுத்த வேண்டும்.  நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவை சரிசெய்வதற்கும், அக்கறையுடன் செயல்படுவதற்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் முறையான குறிப்புகளை வெளியிட வேண்டும். சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவிக்கவேண்டாம் என பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள். மதம், இனம் சார்ந்த பரப்புரைகளை இனி மேற்கொள்ள வேண்டாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like