1. Home
  2. தமிழ்நாடு

குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 நாள் பரோல் வழங்கிய தேர்தல் ஆணையம்..!

1

ஹரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் 2017-ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று ஹரியானாவின் ரோடக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

கடந்த 4 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட முறை பரோல் பெற்று வெளியே வந்த இவர் கடந்த ஜனவரியில் , 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, நீதிமன்ற அனுமதியின்றி பரோல் வழங்க கூடாது என, ஹரியானா அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 21 நாட்கள் தற்காலிக விடுதலை அளிக்கும்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ராம் ரஹீம் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 21 நாட்கள் தற்காலிக விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. பரோல் முடிந்த நிலையில் கடந்த செப்.02-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
 

சிறைக்கு சென்று 27 நாட்களே ஆன நிலையில் மீண்டும் 20 நாள் பரோல் கேட்டு மனு செய்தார். ஹரியானா சட்டசபைக்கு வரும் அக்.05-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்.08-ம் தேதி நடக்கிறது.
 

இந்நிலையில், சாமியாரின் பரோல் மனுவை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு ஹரியானா அரசு அனுப்பியது. ஹரியானா தேர்தல் ஆணையர் பங்கஜ் அகர்வால், கூடுதல் தலைமை செயலர் வாயிலாக சிறை நிர்வாகத்திற்கு அனுப்பினார்.
 

இதனையடுத்து தகுந்த பரிசீலினைக்கு பின் சாமியாருக்கு தேர்தல் ஆணையம் 20 நாள் பரோல் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like