1. Home
  2. தமிழ்நாடு

இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட தடை – இந்திய தேர்தல் ஆணையம்..!

1

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளையும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் நடைபெறும் தேதி குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் பணிகளுக்காக குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதாவது, தேர்தல் தொடர்பாக சுவரொட்டி ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம், முழக்கம் எழுப்புதல் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளுக்கும் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், அரசியல் தலைவர்கள் குழந்தைகளை கையில் தூக்கி சென்று பிரச்சாரம் செய்வது, பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவதும் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சித் தலைவர்களின் அருகிலோ ,கூட்டங்களில் பெற்றோர்களுடனோ குழந்தைகள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like