1. Home
  2. தமிழ்நாடு

இன்றும் நாளையும் சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை..!

1

தெலங்கானா மாநிலம் சிர்சில்லாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது கருத்துகள் அவதூறான வகையில் அமைந்ததாகவும் புகார் எழும்பியது. இதனையடுத்து, (மே.1) இரவு 8 மணி முதல், அடுத்த 2 நாள்களுக்கு(48 மணி நேரம்) அவர் பிரசாரத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி சிர்சில்லா பகுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக பேசியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய சந்திரசேகர ராவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.நிரஞ்சன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து ரஞ்சன்னா சிர்சில்லா மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.ஏப்ரல் 18ஆம் தேதி காலை 11 மணிக்குள் புகார் தொடர்பாக அறிக்கை அளிக்காத பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு உரிய வகையில் சந்திரசேகர் ராவ் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சந்திர சேகர் ராவ் பிரச்சாரம் மேற்கொள்ள 48 மணி நேரத்திற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

Trending News

Latest News

You May Like